கச்சத்தீவு : இரு தேசங்களை இணைக்கும் திருவிழா

மார்ச் 11, 2020

ஒரு சிறிய மலையடி வாரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணி ஆலயம், வர்ண பூச்சுக்கள் பூசப்பட்டு மலர்கள்  மற்றும் வெவ்வேறு வர்ண  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

 

285 ஏக்கர் பரப்பளவு கொண்ட  நீரால் சூழப்பட்ட கச்சதீவ் தீவு, மீனவர்களின் புனிதரான படுவாவின் அந்தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதியை வணங்குவதற்காக இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பிவழிகின்றது.

இன,வர்க்க, நிற, மத வேறுபாடுகள் எதுவுமில்லாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித அந்தோனியாரை வழிபடுவதற்காக இந்த சிறிய தீவுக்கு வருகை தந்துள்ளார்கள். ஒளி மற்றும் ஒலியுடன்  வர்ணமயமாக  இரண்டு நாட்கள்  இடம்பெறும் திருவிழாவுக்குப் பின்னர் இப்பிரதேசத்தில் மயான அமைதி நிலவும்.

நீர்கொழும்பைச் சேர்ந்த ஜெயசீலி பெர்னாண்டோவும், தமிழ்நாட்டின் மாடபுரத்தைச் சேர்ந்த மேரி ஜாகுலினும் கொளுத்தும் வெயிலில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்காக பனைமரத்து நிழலில் அருகருகே  அமர்ந்திருக்கிறார்கள்.


"புனித  அந்தோனியாரின் அதிசய சக்தியில் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். அவர் எப்போதும் எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு உதவுகிறார், ”என  இலங்கை கடற்படையினரால்  இலவசமாக வழங்கிய மதிய உணவினை ருசி பார்த்தவாறு  பெர்னாண்டோ கூறுகிறார்.

 

திருமதி. பெர்னாண்டோ,  அவரது தாயார் சிரியா புஷ்பா (72), அவரது சகோதரி மற்றும் பேத்தி உட்பட 54 பேர் மூன்று மணி நேர கடல் பயணம் மேற்கொண்டு  கச்சத்தீவை வந்தடைந்துள்ளனர். அவர்களின் புனித பயணத்தின் முதற்கட்டமாக  மன்னாரில் உள்ள மடு தேவாலயத்தினை தரிசித்து ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டிருந்தனர்.

“எனது கணவர், 2018 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக மரணமானார். நானும் எனது  இளைய மகளின் குடும்பமும்  மரத்தாலான பலகை வீட்டிலேயே வசித்து வந்தோம்.  கடந்த ஆண்டு, நாங்கள் தேவாலயத்தை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர்  செங்கற்களாலான சிறிய   வீட்டைக் கட்டினோம். கடந்த ஆண்டுகளில் எங்களால் ஒரு ரூபா கடன் கூட பெற முடியவில்லை, ஆனால் எனது மகளால்  அதைப் பெற முடிந்தது. இதை ஒரு அதிசயமாகவே பார்க்கிறேன்" எனக்  கூறி புன்னகைக்கிறார் திருமதி. பெர்னாண்டோ.


தனது 17 உறவினர்களுடன் மாடபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையும் பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 12 மணிநேர பயணம் மேற்கொண்டு கச்சதீவினை அடைந்துள்ளார்  மேரி ஜாகுலின்.  அவர்கள் இந்த  தீவில் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறார்.

"இங்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் தொடர்பாக நான் கவலையுடன் இருந்தேன்.  ஏனெனில் எமது பிரதேசவாசிகள் சிலர் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக என்னை எச்சரித்தனர். ஆனால் இங்கு வருகை தந்த பின்னர் அவர்கள் தெரிவித்ததற்கு நேர்மறையான விம்பம் எனது மனதில் பதிவாகி இருகிறது ”என அவர் கூறுகிறார். திருவிழாவின் போது  பக்தர்கள் தங்கியிருக்கும்  இரண்டு நாட்கள் தவிர வேறு நாட்களில் இங்கு எவரும் தங்கியிருப்பதில்லை. இங்கு இலங்கை கடற்படையின் தளம் மாத்திரமே அமைந்துள்ளது. அப்படியுள்ள வேளையில் இப்புதிய  தேவாலயத்தினை இலங்கை கடற்படையினரே நிர்மாணித்து தந்துள்ளனர். 

எட்டு முறை கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த செர்மிஸ், இந்திய பக்தர்களை ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு நோக்கி கொண்டுவரும் படகு உரிமையாளர். “இந்த விழா எனது நாட்காட்டியில் வருடாந்தம் இடம்பெறும்  அம்சமாகும். இந்தியாவில் இருந்து இதுவரை 250 க்கும் மேற்பட்ட பக்தர்களை இங்கு அழைத்து வந்துள்ளேன்.

 நான் இதை இலவசமாகச் செய்கிறேன், ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போதெல்லாம் புனித அந்தோனியார் மீது கொண்டுள்ள  என் பக்தி அதிகரித்துகொண்டே வருகிறது ”என  கூறும் அவர், ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்படை இதற்காக செய்து வரும் வசதி வாய்ப்புக்கள்  தொடர்பாக பாராட்டவும் தவறவில்லை. வருடா வருடம் கச்சதீவுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக இலங்கை கடற்படை பல்வேறு சேமலாப நலன்களை வழங்கி வருகின்றது என அவர் தெரிவிக்கின்றார். 

புனித  அந்தோனியாரை வணங்குவதைத் தவிர, இலங்கையர்களுடன் நட்பை வலுப்படுத்த சென்னையைச் சேர்ந்த  வடிவமைப்பு பொறியாளரான சில்வெஸ்டர் எதிர்பார்த்துள்ளார். தீவில் பாதுகாப்பு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் கச்சதீவை பார்வையிட அவர் திட்டமிட்டுள்ளார்.

புனித யாத்திரையை மேற்கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைத்த  பாக்கியம் எனக் கூறுகிறார்  இந்தியா, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான மேரி.

"எங்களை நன்றாக கவனித்து, எங்களுக்கு உணவு வழங்கியதற்காக இலங்கை கடற்படையினருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும்  இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நன்றாக இருந்தன, ”என்றும்  ஒரு படகில் 31 பக்தர்களுடன் தானும் ஒருவராக வந்த மேரி  கூறுகிறார்.

தென்னிந்தியாவின் திருச்சி, கும்பகோணம் மற்றும் சேலம் பகுதிகளை உள்ளடக்கிய  சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட போதகர்கள் மற்றும் ஏறத்தாள  2,500 பக்தர்கள்  இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவிற்கு வருகை தந்துள்ளதாக சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை  சைமன் பென்ஜிமின் கூறுகிறார்.

 “இது எனது முதல் வருகை மற்றும் கச்சத்தீவில் முதல் அனுபவம். தீவு முழுவதும் அழகாகவும் இரம்யமாகவும்  தெரிகிறது. இப்போது மக்கள் தேவாலய நடவடிக்கைகளில் நிம்மதியாக பங்கேற்கலாம். நிகழ்வு நன்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் விருந்து ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் அரசாங்கங்களும் நன்கு ஒத்துழைத்தது போல் தெரிகிறது. நாங்கள் இங்கே வசதியாக உணர்கிறோம், ”என தெரிவித்த  அவர்  மறக்காமல்  இலங்கை கடற்படையினருக்கு நன்றி கூறவும் மறக்கவில்லை.

35 போதகர்களுடன்  செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து ஒரு படகில் வந்த அருட்தந்தை. பெஞ்சிமின், இங்கு மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள், அருமையான  விருந்தோம்பல் மற்றும் வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக தன்னுடன் எடுத்துச்செல்வதற்கான செய்தி ஒன்று உள்ளதாக குறிப்பிட்டார்.


"COVID-19 அச்சம் இல்லையென்றால் இந்தியாவில் இருந்து அதிகமான பக்தர்கள் இங்கு வருகைதந்திருப்பார்கள் என அவர் கூறுகிறார்.

எல்லாம் சீராக நடந்ததாக சென்னை ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் திண்டுக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த ரெக்ஸ் கூறுகிறார்.

"இலங்கை எம்மை எதுவித சிரமமும் இல்லாத வகையில்  சிறப்பாக வரவேற்றது. நாம் காலை 10 மணியளவில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு இங்கு வந்தோம். அடுத்த வருடமும் நான் இந்த இடத்திற்குத் திரும்ப வரவேண்டும் என நினைக்கிறேன்”என்று அவர் கூறுகிறார்.

திருப்பலி பூஜையின் பின்னர்  பக்தர்கள் மத்தியில்  உரையாற்றிய காலி மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ரேமண்ட் விக்ரமசிங்க, கச்சத்தீவு திருவிழாவை நடத்த உறுதிபூண்டுள்ள இலங்கை கடற்படை  உள்ளிட்ட முப்படையினரின்  அர்ப்பணிப்பால் ஏற்பட்ட சமாதானம் காரணமாக கடவுளை சுதந்திரமாக வணங்குவதற்கான பாக்கியம் கிடைத்துள்ளதாக  கூறுகிறார்.யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் திருப்பலி ஒப்புக்கொடுக்கின்றார்."இந்த வருடாந்த திருவிழா ஏற்பாட்டிற்காக   கடற்படையினர் மேற்கொண்ட  அர்ப்பணிப்புக்களை  கடந்த சில வருடங்களாக  நாம் கண்கூடாக  காண்கிறோம்.

இதற்காக இலங்கை இராணுவம், இலங்கை பொலிஸ்  அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பை நான்,  சகவாழ்வு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் மீதுள்ள அங்கீகாரம் மற்றும் அனுசரிப்புகளின் அடையாளமாக நான் பார்க்கிறேன், ”என அவர் கூறுகிறார்.

யாழ் மறைமாவட்ட அருட்தந்தை வைத்திய கலாநிதி ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை இப்புனித தீவில் புதிய தேவாலயம் ஒன்றை நிர்மாணித்து கொடுத்தமைக்காக முன்னாள் பாதுகாப்பு பிரதானி அட்மிரல் ரவி விஜேகுனரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா ஆகியோருக்கு தனது விஷேட நன்றியினையும் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை கடற்படையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்பே பூர்த்தி செய்யப்பட்டதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்தார்.

areவடமாகான கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் தலைமையின்கீழ் சுமார் 500 கடற்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். கச்சதீவு தேலயத்தின் வருடாந்த திருவிழாவினை  வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். மேலும்,  சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் மேற்கு எல்லையில்  அமைந்துள்ள இக்கச்சத்தீவு தேவாலயத்திற்கு தேவையான தளவாடங்களை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படை கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

கடற்படையினர் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் குடிநீர் மற்றும் சுகாதார தேவைகருதி சுமார் 500,000 லிட்டருக்கும் அதிகமான நீர் விநியோகிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தளபதியின் தகவல்களின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது. 

புள்ளிவிபரங்களின் பிரகாரம், இவ்வருட கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக 86 படகுகள் மூலம் 2,510 இந்திய பக்தர்கள் உட்பட மொத்தமாக 8,583 பக்தர்கள் வருகைதந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பயம் இருந்தபோதிலும், இப்புனித திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இங்கு வருகை தந்த பக்தர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

இலங்கை கடற்படையினர் இங்கு வருகை தந்த பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கடல் போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கியதுடன் இரவு பகலாலக இத்திருவிழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களின் பாதுகப்பபையும் உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தற்போதைய கொவிட் -19 எனும் கோரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் இத்தீவுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை   குறிப்பிடத்தக்கது.    

 

 யாழ் மறைமாவட்ட அருட்தந்தை வைத்திய கலாநிதி ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை, காலி மறைமாவட்ட அருட்தந்தை ரேய்மன் விக்ரமசிங்க மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட ஆயர்  ஜோசப் லோர்டு ராஜா ஆகியோரினால் பக்தர்களுக்கு விசேட திருச்சொருப ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் மும்மொழிகளிலும், .திருப்பளிபூஜையும் மேற்கொள்ளப்பட்டது.

ற்றும் ஜக்குலின் போன்ற ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வருகை தருகின்றமைக்கு இப்புனித அந்தோனியார் தேவாலயத்தில் பொதிந்திருக்கும் அதிசய சக்தியே என்பதாக அவர்கள்  உணர்கின்றனர்.

இங்கு வருகை தரும் அனைத்து இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும்  இருநாடுகளுக்கிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இலங்கை கடற்படையினர் சிறப்பாக செயட்படுவதனாலேயே அனைவரும் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இப்புனித நகரத்திற்குள் வருகை தருபவர்களை நாங்கள் இந்தியர் மற்றும் இலங்கையர் என கருதாமல் அனைவரும் ஒரே குடும்பம் என்பதாக உணர்வதுடன், எம்மத்தியில் உள்ள ஏனைய பக்தர்களின் மொழிகள் தெரியாதபோதும் அனைவரும் பனை மரத்தின்கீழ் அமர்ந்துகொண்டு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைப்பதன் மூலம் நாம் அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகமானவர்களைப்போல் உணர்வதாக பெர்னாண்டோ தெரிவித்தார்.