--> -->

கடற்படையின் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி 2019' ஆரம்பம்

ஜனவரி 09, 2019

இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி 2019' கடந்த திங்களன்று (ஜனவரி, 07) ஆரம்பமானது. குறித்த போர் பயிற்சியானது கிழக்கு துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படை சிறப்பு படை பிரிவினால் முன்னெடுக்கப்படுவதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்னிரெண்டு வார கால இடைவெளியினைக்கொண்ட இப்பயிற்சி நெறியில் பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், பாக்கிஸ்தான், நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சுமார் முப்பத்தி இரண்டு (32) படை வீரர்கள் பங்கெடுக்கின்றனர். இப்பயிற்சி நெறி,பங்கேற்பாளர்களுக்கு இலங்கை கடற்படையின் பல் பரிமாண போர் அனுபவத்தினையும் அறிவையும் பெற்றுக்கொள்வதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்போர்பயிற்சி எதிர் வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.