கொவிட்-19 தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்புவவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை

மார்ச் 16, 2020
  • தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் பதிவுகளை பதிவிட்ட இருவர் கைது

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஊடகங்களில் மூலம் மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் வதந்திகளை பரப்புவவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.  

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடையூறுகள் விளைவிப்பதுடன் மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் வதந்திகளை பரப்பி பதட்டமான சூழ்நிலையை உருவாக்க சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாருக்கு பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்தே பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன், இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் அணைத்து மக்களின் உயிர்களை பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அனால் சில கட்சிகளும் தனிநபர்களும் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வதந்திகளை பரப்புவது என்பதைப் பார்கும்போது ஏமாற்றமளிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

சமூக ஊடக வளைத்தளங்களில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை வெளியிடும் அத்தகைய நபர்களின் செயற்பாடுகளை  அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறனவர்களுக்கு எதிராக பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் கொவிட்-19 தொடர்பாக முகப்புத்தகத்தின்  மூலம் வதந்திகளை  பதிவிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக டிபன்ஸ்.எல்கே இற்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டின் 24 இலக்க கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் சமூக ஊடக வலைதளங்கள் ஊடக வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.