கொவிட் - 19 பரவுவதை தடுக்க மிடாஸ் சேப்டி நிறுவனத்தினால் 52,000 சோடி கையுறைகள் அன்பளிப்பு
மார்ச் 17, 2020கொரோனா வைரஸ் பரவலை தடுக்கம் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவிசாவளை மிடாஸ் சேப்டி குழுவின் ப்ரைம் பொலிமர் பிரிவினால் ஒரு தொகை கையுறைகள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
இன்று (17) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது இந்நி றுவனத்தின் ப்ரைம் பொலிமர் பிரிவு முகாமை நடவடிக்கைகளுக்கான பிரதிப்பணிப்பாளர் நளின் ஜயவீரவிடமிருந்து 52,000 சோடி கையுறைகளை பாதுகாப்பு செயலாளர் பெற்றுக்கொண்டார்.
இவற்றில் 50,000 கையுறைகள் மருத்துவ பயிற்சியாளர்கள் பாவனைக்காகவும் ஏனைய 2,000 கையுறைகள் பொதுவான சுத்தப்படுத்தும் நோக்கிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இராணுவத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் வகையில் குறித்த தமது நிறுவனத்தினால் இந்நன்கொடை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்கொடையாக வழங்கப்பட்ட குறித்த 52,000 சோடி கையுறைகளும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முப்படையினரால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு ஒரு உந்து சக்தியை வழங்கும்.
இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.