சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

ஜூலை 23, 2019

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதிமேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஜூலை, 24) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது சுவிஸ்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.