வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொற்று நோய்கள் பிரிவு இலங்கை கடற்படையினால் புதுப்பிப்பு

மார்ச் 26, 2020

இலங்கை கடற்படையினர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தொற்று நோய்கள் பிரிவினை புனர்நிர்மாணம் செய்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும்  முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் கடற்படையினரால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கும் வகையில் பிராந்திய மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளின் திறனை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய மேற்கு கடற்படை கட்டளையகத்தில் இணைக்கப்பட்ட  சிவில் பொறியியலாளர்கள் குழுவினரால் மார்ச் 23 ஆம்  திகதி புனர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக  கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மேலும், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்கவின் மேற்பார்வையில் இப்புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.