பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் உளர் உணவு பொதிகள் விநியோகிப்பு

மார்ச் 26, 2020

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சித்ராணி குணரத்ன அமைச்சில் பணிபுரியும் சிற்றூழியர்களுக்கு  உலர் உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளார்.

இன்று (மார்ச் 26) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட உலர் உணவுப் பொதிகளே இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அரசின் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, அன்றாடம் உழைத்து சாப்பிடும் மக்களின் வாழ்க்கை நிலைமையினை கருத்தில்கொண்டு நன்கொடையாளர்கள் குழுவினரால் இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.